பெருமதிப்புக்குரிய நாகர்கோவில் மக்களுக்கு!

எமது  நாகர்கோவில்  மக்களது  நலனை  முதன்மையாக  கொண்டு  ஆரம்பிக்கப்பட்ட  நாகர்கோவில்  மக்கள்  ஒன்றியத்தின்  செயற்பாடுகள் ,  தற்போது இயங்குநிலையற்று  இருப்பதனால்  தொடர்ச்சியாக  எமது  நாகர்கோவில்  மக்கள்  ஒன்றிய  இணையத்தளமும் அவ்வாறான  மந்தநிலையிலேயே  இருக்கின்றது.  இந்நிலை தொடருமாயின்  இணையத்தள செலவினங்களை  கருத்திற்கொண்டு  செயற்பாடற்ற  இணையத்தை  முடக்க  வேண்டிய  சூழல்  ஏற்படும்.    இந்த  நிலையினை  தவிர்த்து மீண்டும்  எமது  மண்சார்ந்த  விடயங்களோடும்  மக்களுக்கு  பயனுள்ள  தகவல்களோடும்  இணையத்தை செயற்படுத்த  விரும்புகிறேன்.

இது  குறித்த  மக்களது  கருத்துக்கள்  வரவேற்கப்படுகிறது.